Header

Sri Lanka Army

Defender of the Nation

16th April 2021 12:00:25 Hours

இராணுவ தளபதி கண்டி நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திற்கு விஜயம்

ஸ்ரீ தலதா மாளிகைக்கு வியாழக்கிழமை (15) விஜயத்தை மேற்கொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் முருத்தலாவ செல்லும் வழியில் உள்ள நெல்லிகலயில் உள்ள நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

பின்னர், நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவர் வண. வதுரகும்புரே தம்மரதன தேரர் ,ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் பௌத்த சன்னதியில் இருந்து பகொட வளாகத்தில் உள்ள சிலை மற்றும் அங்குள்ள சுமன சமன் கடவுள் உள்ளிட்ட இடங்களில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பின்னர், பௌத்த தேரர் வளாகத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகளைக் சுற்றிகாட்டியதோடு, அதனுடன் தொடர்புடைய சில விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். வளாகத்திற்குள் வருகை தந்த பல பக்தர்கள் இராணுவத் தளபதியை கண்டு அவரை வாழ்த்தினர் என்பது சிறப்பம்சமானது.