16th April 2021 13:42:23 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் , தனது துனைவியாரான இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் வியாழக்கிழமை (15) ஆம் திகதி கண்டியில் உள்ள புனித தலதா மாளிகைக்கு சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டார்.
இதன்போது நுழைவாயிலில், வைத்து விகாரையின் செயலாளர், தியவதன நிலமே நிலங்க தெல பண்டார அவர்கள் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை புனித இடத்தின் கீழ் மற்றும் மேல் அறைகளுக்கு பிராத்தனைக்காக அழைத்துச் சென்றார். அவர் வளாகத்தில் உள்ள சன்னதியையும் பார்வையிட்டு, அவரை வாழ்த்த வந்த இரண்டு ஒரு சில பக்தர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த வழிப்பாட்டில் 11வது படைப் பிரிவின் சில சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.