Header

Sri Lanka Army

Defender of the Nation

13th April 2021 05:30:22 Hours

பிரதேச சபையினர் இராணுவத்தினரின் பணிக்கு பாராட்டு

ஒட்டமாவடியில் உள்ள கோரலைபட்டு மேற்கு பிரதேச சபை கோவிட் -19 தடுப்பு பணி மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்ட, 44 இராணுவ வீரர்களை ஞாயிற்றுக்கிழமை (11) இடம் பெற்ற பிரதிநிதிகள் சந்திப்பில் ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்திற்கு அழைத்து இராணுவத்தினரின் பணிக்கு பாராட்டு தெரிவித்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, 44 இராணுவ வீரர்களுக்கும் அவர்களின் சேவைகளைப் பாராட்டி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. பிரதேச சபை தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 23 வது படைப் பிரிவு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த, 231, 232 மற்றும் 233 வது பிரிகேட்டின் தளபதிகளுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.