13th April 2021 04:30:22 Hours
மின்னேரிய கலாட்படை பயிற்சி நிலையத்தில் பயிற்சியை நிறைவு செய்த 239 சிப்பாய்கள் வெளியேறும் நிகழ்வு கடந்த (10) ஆம் திகதி சனிக்கிழமை சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப இடம் பெற்றது.
இந்த நிகழ்வற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ பயிற்சி கட்டளையின் தளபதி மேஜர் ஜெனரல் சேனா வடுகே அவர்களுக்கு வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது.
இவர்கள் கலாட்படை பயிற்சி நிலைய தளபதியின் மேற்பார்வையில் கலாட்படை பயிற்சி நிலையத்தில் நான்கு மாத கால பயிற்சியை பெற்றனர்.
இதன்போது சிப்பாய் எச்.பி.வி திஷான் சிறந்த குறிபார்த்து சுடும் வீரராகவும் சிறந்த சிப்பாய்க்கான விருதை சிப்பாய் ஜே.எம்.ஏ தரங்கவும், சிப்பாய் டி.எம்.கே.சானுக சிறந்த உடல் தகுதி வீரருக்கான பயிற்சி விருதையும் பெற்றனர். இவர்கள் அந்த விருதுகளை அன்றைய பிரதம அதிதி அவர்களிடம் பெற்று கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலாட்படை பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் பி.எஸ்.கே.சஞ்சீவ உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள், படையினர், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.