Header

Sri Lanka Army

Defender of the Nation

13th April 2021 06:45:22 Hours

கிழக்கு படையினரால் காலாட்படை பயிற்சி மைதானத்தில் புதுவருட கொண்டாட்டம்

கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகம் மற்றும் கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தலையகம் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்புடன் (ஐ.டி.என்) இணைந்து வருடம்தோறும் கொண்டாடப்படும் சிங்கள மற்றும் தமிழ் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை“சூர்யா மங்கல்லய” மினேரிய காலாட்படை பயிற்சி மைதானத்தில் ஏற்பாடு செய்தன.

இந்த நிகழ்வு சுகாதார வழிகாட்டுதல்களைக் பின்பற்றி இடம் பெற்றதுடன் இந்த விழாவில் பல பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை (13) நடத்தப்பட்டது.

இப் போட்டியில் ஓலை பின்னுதல், பனிஸ் சாப்பிடுதல், 'சிங்கிதி அவருது குமாரி' சிறுமிகளின் அழகி போட்டி தேர்வு, யானைக்கு கண் வைப்பது, வினோத உடை போட்டி மற்றும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கையான விளையாட்டுக்கள் அன்றைய நிகழ்வை மெருகூட்டியது. இந்த நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஜெனரல் சன்ன வீரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அதற்கமைய கிழக்கு படையினரால் இந்த தளம் அலங்கரிக்கப்பட்டு ஒரு பாரம்பரிய கிராமப்புற கிராமத்தை சித்தரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கிழக்கை தளமாகக் கொண்ட படையினர்கள் போட்டிகளில் பங்கேற்க காலாட்படை பயிற்சி மைதானத்தில் இணைந்திருந்தனர்.

நிகழ்வின் முடிவில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பிரதேச தலைமையக தளபதி பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன, மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வெற்றி கிண்ணங்களையும் வழங்கினர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.