09th April 2021 09:31:44 Hours
இராணுவத்தின் மோட்டார் வாகன வேக போட்டியான குக்குலேகங்க ஸ்பீட் கிளைம் 2021 போட்டி, 120 மேற்பட்ட தரமான ஓட்டுநர்கள், 80 மோட்டர் சைக்கிள் பந்தைய ஓட்டுநர்களின் பங்கேற்புடன் வியப்பூட்டும் வகையில் நேற்று (10) இடம்பெற்றது .ஞாயிற்றுகிழமை (11) இறுதிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இராணுவ மோட்டார் விளையாட்டுச் சங்கம் மற்றும் இலங்கையின் மோட்டார் பந்தயச் சங்கம் ஆகியவை இணைந்து மேற்படி போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தன. சனிக்கிழமை காலை மோட்டார் ரேசிங் தடம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக குக்குலேகங்க பகுதியில் விறுவிறுப்பான மற்றும் வியப்பான மோட்டார் சைக்கிள் விளையாட்டு நிகழ்வு 70 வானங்கள், 10 பந்தய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 25 ஓட்டுநர்களுடன் 3 போட்டி கார்களுடன் நடைபெற்றது.
குக்குலேகங்காவின் மலைப்பாங்கான பகுதிகளில் முழுமையாக கார்பட் செய்யப்பட்ட புதிய பந்தய பாதையானது வீரர்களின் சாகச திறைமைகளுக்கு மாறாக புதிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு அவசியமான வகையில் அமைந்திருந்ததோடு, இப் பாதை 900 மீட்டர் வரை நீளமும், 10 மீ அகலம் மற்றும் 60 பாகை சாய்வு மற்றும் 7 வலைவுகளை கொண்டுள்ளது, இதில் 2 கூர்மையான வளைவுகளும் உள்ளன.
இதன்போது இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்கள் நிகழ்வின் முதன்மை விருந்தினராக பங்கேற்று, கொடியசைத்து மேற்படி போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனையடுத்து முதல் நாள் போட்டியின் பங்கேற்பாளர்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கான பரிசுகளையும் வழங்கிவைத்தார்.
மேலும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகளை பார்வையிட வருகை தந்திருந்தனர்.