Header

Sri Lanka Army

Defender of the Nation

11th April 2021 16:40:58 Hours

21வது படைப்பிரிவின் ஆண்டுபூர்த்தியை முன்னிட்டு விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்கல்

21 வது படைப்பிரிவின் 33 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வு, 21 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் ஆலோசனைக்கமைய அனுராதபுரம் ரணசேவாபுர பிரதேசத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்றது.

ஆண்டு பூர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது, 21 ஆவது படைப்பிரிவின் தளபதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த அவர், படையினருக்கான உரை நிகழ்த்தியதுடன் குழு புகைப்படம் எடுத்தல் மற்றும் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

ஆண்டு பூர்த்தி தினத்துக்கு முன்பாக , 21வது படைப் பிரிவு தளபதியுடன் இணைந்து அப்படைப்பிரிவின் சிப்பாய்காளால் சாலியபுரவிலுள்ள ‘மித்ரா’ லமா நிவசய சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் விசேட தேவையுடை சிறுவர்களுக்கு அவசியமான உணவு வகைகள் மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்கினர்.

21 வது பபடைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.