13th April 2021 05:45:22 Hours
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு மதவாச்சியில் உள்ள ஹிரல்லுகம மற்றும் எத்தாகட கிராம நிலதாரி பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 500 உலர் உணவுப் பொதிகள் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றது.
இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாராவின் அறிவுறுத்தலின் பேரில் 21 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான அனுசரணையானது வரையறுக்கப்பட்ட சன்சைன் வாடிக்கையாளர் லங்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
211 வது பிரிகேட் தலைமையக தளபதியின் மேற்பார்வையில் இரண்டு கட்டங்களில் விநியோக திட்டம் நடத்தப்பட்டது.
முதல் கட்டத்தின்போது ஹிரல்லுகம கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மொத்தம் 11 உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இதையடுத்து, ஹிரல்லுகமாவின் ஸ்ரீ சுனந்தராமா விகாரையில் 324 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இரண்டாவது கட்டமாக மீதமுள்ள உலர் உணவுப் பொதிகள் எத்தாகடாவின் கலேகம கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டன. பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு எத்தகாட மகா வித்யாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.
211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.சி.எஸ்.கே.சேனாரத்ன, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக சிவில் விவகார அதிகாரி , வரையறுகப்பட்ட சன்ஷைன் நுகர்வோர் லங்கா நிறுவன அதிகாரிகள் மற்றும் பல அரச அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். affiliate link trace | Nike Shoes