Header

Sri Lanka Army

Defender of the Nation

13th April 2021 05:00:22 Hours

20 வது கஜபா படையணியின் படையினரால் மற்றுமொரு வீடு நிர்மாணம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 20 வது கஜபா படையணியின் படையினர் , புல்மோட்டை மகாசென்புராவில் உள்ள 9 வது மைல் பகுதியில் வசிக்கும் ஓர் ஏழைக் குடும்பத்திற்காக புதிய வீட்டை நிர்மாணித்தனர்.

இதற்கான அனுசரணையானது எம்.டி.வி / எம்.பி.சி, 'சிரச' மீடியா வலையமைப்பின் 'சிரச நிவாச' திட்டத்தின் மூலம் பாதுகாப்புத் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அளித்த வழிகாட்டுதல்களின் கீழ் வழங்கப்பட்டது.

62 வது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபாலி குணசேகர அவர்களினால் தொழில்நுட்ப திறமையான பொறியியல் மற்றும் எனைய படையினரின் ஒத்துழைப்பின் மூலம், ‘சிராசா நிவாசா’ திட்டத்தால் கிடைக்கப்பெற்ற நிதி மூலம் இந்த திட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

62 வது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் உபாலி குணசேகர அவர்கள் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதோடு, 621வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பெரகம், எம்டிவி மற்றும் எம்பிசி வலையமைப்பின் பொது தொடர்புத் துறைத் பணிப்பாளர் திரு.பிரியந்த விஜேசிங்க.சிரச எஃப்எம் அலைவரிசையின் பிரதாணி திரு சஜித் ரத்நாயக்க மற்றும் 'சிரச நிவாச' திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வறுமையில் வாடும் திருமதி நயனமாலி தில்ஹாராவின் வாழ்க்கை நிலைமை கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், செலவினங்களைக் குறைப்பதற்காக அனுசரணையாளர்கள் இராணுவத் தளபதியிடம் இராணுவ மனிதவளத்தையும், கட்டுமானத் திறன்களை நாடியதுடன், மிகவும் தேவைப்பாடான இந்த வீட்டைக் கட்டியெழுப்பினர்.

மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அன்றைய பிரதம விருந்தினரும் அனுசரணையாளர்களும் மங்கள விளக்கேற்றல் மற்றும் பால்-பானை பொங்குதல் ஆகிய நிகழ்வுகளுடன், பயனாளிகளுடன் சேர்ந்து, புதிய வீட்டின் சாவியை பயனாளியிடம் ஒப்படைத்தனர். latest Running | GOLF NIKE SHOES