Header

Sri Lanka Army

Defender of the Nation

16th April 2021 13:35:11 Hours

உயிர் நீத்த படைவீரரின் துனைவியர் மற்றும் அவரின் இரண்டு மகள்களுக்குமான புதிய வீடு

2006 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடும் போது வேப்பம்குளத்தில் எல்டிடியினரின் கண்ணிவெடித்தாக்குதலுக்குள்ளாகி உயிர் நீத்த 10 வது கஜபா படையணியின் படை வீரரின் குடும்பத்திற்காக 1.5 மில்லியன் ரூபா செலவில் புதிய வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

கண்டியில் வசிக்கும் குறித்த குடும்பத்திற்கான இந்த புதிய வீடு 11 வது படைப்பிரிவின் படைத் தளபதியினால் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து நிர்மாணிக்கப்பட்டது..

21 வது படைப்பிரிவின் தளபதியின் வேண்டுகோளிற்கமைவாக பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா திங்கள்கிழமை (12) பிற்பகல் குறித்த இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினைத் திறந்து வைத்தார்.

இந்த வீடானது மெனிக்ஹின்ன பிலவலவில் வசிக்கும் 10வது கஜபா படையணியின் சார்ஜன்ட் ஆர்.ஏ.அருண் மற்றும் அவரது இரண்டு மகள்களுகாக நிர்மாணிக்கப்பட்டதோடு அவர்களின் துனைவியருக்கு தளபதியின் செலவில் தளபாடங்களை பரிசளிக்கப்பட்டது.

உயிர் நீத்த பதவி நிலை சார்ஜன்ட் ஆர்.ஏ.அருண அவரகளின் இரண்டு மகள்களும் கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் தரம் 12 மற்றும் தரம் 10 வகுப்புகளில் படித்து வருகின்றனர்.

மேலும் இராணுவத் தளபதியின் ஆசிர்வாதத்தில் 11 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் இராணுவ தலைமையகத்தின் படைவீரர் விவகார பணிப்பகம் மற்றும் கஜபா படையணி தலைமையகம் இணைந்து இந்த புதிய வீட்டை நிர்மாணிக்க முன்வதந்தது.

குறித்த பெண் சார்ஜன்ட் தற்போது 11 வது படைப்பிரிவில் பணியாற்றி வருகின்றார். அந்த இடத்திற்கு வந்த அன்றைய பிரதம விருந்தினரை பயனாளி மற்றும் அவரது மகள்மார், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவா, மற்றும் 11 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் ஆகியோர் அன்பார வரவேற்றனர்.

பின்னர் 'செத் பிரித்' கோஷங்களுக்கு மத்தியில் ஜெனரல் ஷவேந்திர சில்வா பயனாளி குடும்பத்துடன் இணைந்து புதிய வீட்டை திறந்துவைத்தார்.

அதே நேரத்தில், இராணுவத் தளபதியினால் ரூ .2 லட்சம் மதிப்புள்ள தளபாடங்கள் குறித்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டன.

உயிர் நீத்த படைவீரரின் 10 வது கஜபா படையணியின் படையினர் தங்களது கட்டளை அதிகாரி மேஜர் கிங்ஸ்லி சமரசிங்கவின் கட்டளையின் கீழ் கடந்த ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர் இந்த வீட்டைக் கட்டுவதற்கு அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் மனித ஆற்றலையும் வழங்கினர்.

இந்த திட்டத்திற்காக படைவீரர் விவகார பணிப்பகம் ரூ .1.2 மீல்லியனும் கஜபா படையணி தலைமையகம் ரூ .3 லட்சம் தொகையையும் வழங்கியது.

பயனாளிகள் இராணுவத் தளபதி மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுக்கு அவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் கனவை நனவாக்குவதற்கான மதிப்புமிக்க பங்களிப்புக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

111 வது பிரிகேட் தளபதி உட்பட சில சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.