09th April 2021 09:01:44 Hours
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத் தலைவர் திரு பிரசாத் லொக்குபண்டார அவர்களால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து ஒட்டுசுட்டான் 64 வது படைப்பிரிவில் சேவையாற்றும் இராணுவ குடும்பங்களின் மாணவர்களுக்கு தலா 30,000 ரூபாய் பெறுமதியான 59 புலமைப் பரிசில்கள் புதன் கிழமை (03) வழங்கி வைக்கப்பட்டன.
‘ரணவீரு அபிநந்தன பூஜா - விரு சஹான யாத்திரை’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான வழிக்காட்டலினை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் 64 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன வழங்கியிருந்தார்.
இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் பல்லவல நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்தார்.
64 வது படைப்பிரிவு தளபதியின் அழைப்பின் பேரில் மேஜர் ஜெனரல் அஜித் பல்லவல பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 59வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் தொன் சூரியபண்டார , 68 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் கீர்த்தி பண்டார, 68 வது படைப்பிரிவு கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இராணுவ குடும்பங்களின் மாணவர் குழு, சில ஆசிரியர்களுடன் ஒட்டுச்சுட்டான் 64 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடைகளை பெறுவதற்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். Asics footwear | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth