Header

Sri Lanka Army

Defender of the Nation

09th April 2021 06:01:44 Hours

இராணுத்தினரால் மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

மட்டக்களப்பு ஹட்டன் நெஷனல் வங்கியின் முகாமையாளர் திரு ஏஏஎல் குமார அவர்களின் உதவியுடன் பவக்கோடிச்சேனை விநாயகர் பாடசாலை மற்றும் இருட்டுச்சோலை மடு விஷ்ணு பாடசாலை ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (6) இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கலந்துகொண்டதுடன் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 4 வது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் லசந்த ஜயசிங்க அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அதனையடுத்து படையினரால் மறுசீரமைக்கப்பட்ட பவக்கோடிச்சேனை விநாயகர் பாடசாலையின் மைதானம் கிழக்கு தளபதியால் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தங்கள் விளையாட்டு மற்றும் பயிற்சி நடைமுறைகளை மீண்டும் தொடங்க முடிந்தது.

திறப்பு விழாவில் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பாடசாலை சமூகமும கலந்து கொண்டனர். Running Sneakers | Patike