09th April 2021 10:01:44 Hours
உடல் ஊனமுற்ற நிலையில் சொந்த காணியில்லாமலிருந்த ஆறு போர் வீரர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கல், காயமடைந்த போர் வீராங்கனை ஒருவருக்கான புதிய வீடு வழங்குதல், இராணுவ அங்கவீன விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் போன்ற பல நன்கொடைகள் வழங்கும் நிகழ்வு இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைமையகத்தில் வியாழக்கிழமை (8) சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் தலைமையில் நடைபெற்றது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாத்தறை மாவட்ட உடஅப்பரெக்க ,தெவினுவர பிரதேச செயலாளர் பிரிவின் திருமதி பெட்ரிஸ் அபயசிறிவர்தன அவர்களால் நன்கொடையளிக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலம் போரினால் காயமடைந்த 06 படை வீரர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. உறுதி பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி தலைவி திருமதி சுஜீவா நெல்சன் , இலங்கை ஔிபரப்பு கூட்டுதாபனத்தின் செய்தி வாசிப்பாளரும் பட்டதாரி ஆசிரியரும் நன்கொடையாளருமான திருமதி பெட்ரிஸ் அபயசிறிவர்தன மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இராணவத்தில் சேவையாற்றி உயிரிழந்த தனது சகோதரன் மற்றும் பெற்றோரின் நினைவாக இந்த புண்ணிய காரியத்தை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான போராட்டத்தில் திறம்பட பங்களிப்புச் செய்த 6 சொந்த காணியற்ற போர் வீராங்கனைகளிடையே நிலம் பகிரப்பட்டு விநியோகிக்கப்பட்டது. மேற்படி வீரர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
அதே நேரத்தில் இன்டஸ்ரியல் சேப்டி இக்யூப்மெண்ட் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மாத்தறை தெனியாயவில் 1.2 மி செலவில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு போர் வீரர்களுள் ஒருவரான சார்ஜன்ட் எம்.எம்.சமிந்த அவர்களுகான வீடு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் அவர் 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது காயமடைந்தால் தனது இரு கால்களினதும் ஒவ்வொரு பகுதிகளை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் கொஸ்கம இராணுவ தொண்டர் படைத் தலைமையகத்தில் கேணல் நிர்வாகம் நலிந்திர மகாவித்தான அவர்கள் சிறப்பு படைத் தலைமையக அலகின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. புதிய வீட்டின் சாவிகள் பயனாளிக்கு திருமதி சுஜீவா நெல்சன், அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இன்டஸ்ரியல் சேப்டி இக்யூப்மெண்ட் நிறுவனத்தின் தலைவி திருமதி தீபிகா குணசேகர, பிரதி தலைவர் திருமதி பிரியந்தி ரணசிங்க மற்றும் சிறப்பு படைத் தலைமையகத்தின் நிலையத் தளபதி பிரிகேடியர் நிஷங்க எரியகம ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் பாரா விளையாட்டுகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு அவசியமான விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கான நிதி உதவி இரத்தினபுரி லக்ஷி அலகு கலை நிலையத்தின் உரிமையாளர் திருமதி லக்ஷி கதவத்தாராச்சி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் சேவை வனிதையர் பிரிவின் தலைவரால் சிறப்பு படை தலைமையகத்தின் நிலையத் தளபதி பிரிகேடியர் நிஷங்க எரியகமவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவ சேவை வினதையர் திட்டமிடலின் சிரேஷ்ட உறுப்பினரும் சேவை வனிதையர் பிரிவு பிரதி தலைவியுமான திருமதி ஷாமி வணசிங்க மற்றும் சிறப்புப் படையின் பிரதி தலைவர் திருமதி பிரியந்தி ரணசிங்க, , பிரிகேடியர் நிஷங்க எரியகம, சிறப்புப் படை தலைமையகத்தின் நிலையத் தளபதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கேணல் துஷாரா பாலசூரியா, தலைமையக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நன்கொடையாளர்கள் குழுவின் திருமதி பீட்ரிஸ் அபேசிரிவர்தன, திருமதி தீபிகா குணசேகர மற்றும் திருமதி லக்சி கதவதராச்சி ஆகியோருக்கு அன்றைய விழாவை நிறைவில் சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவு திட்ட அலகின் சிரேஸ்ட உறுப்பினர் திருமதி சாமி வனசிங்க மற்றும் சிறப்புப் படைகளின் சேவை வனிதையர் பிரிவு உதவி தலைவி திருமதி பிரியந்தி ரணசிங்க, சிறப்பு படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் நிஷங்க எரியகம, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கர்ணல் (ஒருங்கிணைப்பு) கர்ணல் துஷார பாலசூரிய, இராணுவ சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Sports brands | Nike Shoes