Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2021 10:13:34 Hours

இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையின் பயிற்சி பாடவிதானத்தை பயிற்சி பணிப்பாளர் மதிப்பீடு

பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் கபில டொலகே செவ்வாய்க்கிழமை (30) புத்தளம் சின்ன வில்லாறுவத்தை இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

பயிற்சி பணிப்பாளருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டதுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பு அதிகாரி கர்ணல் பிரசன்ன கருணநாயக்க மற்றும் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையின் தளபதி லெப்டினன்ட் கேர்ணல் கே எம் டி ஐ பி கமல்கொட ஆகியோர் வரவேற்றனர்.

பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் கபில டொலகே தனது வருகையை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றினை நாட்டி வைத்தார். மேலும் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையின் பயிற்சி பாடத்திட்டம் தொடர்பாக ஆட்சேர்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பு அதிகாரி கர்ணல் பிரசன்ன கருணநாயக்க மற்றும் புத்தளம் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையின் தளபதி லெப்டினன்ட் கர்ணல் கே எம் டி ஐ பி கமல்கொட விளக்கமளித்தனர்.

பயிற்சி பாடத்திட்டத்தை பாராட்டியதோடு பாடசாலை வளாகம் தங்குமிட வசதிகளை பார்வையிட்டதுடன் அவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கலந்துரையாடினார். பின்னர் படையினருக்கு உரையாற்றினார்.

பாடசாலையின் உயர் தரத்தை பேணுவதற்காக பாடசாலையின் தளபதி மற்றும் அனைத்து நிலைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த அவர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டார்.

இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இவ்விஜயத்தின் போது பங்கேற்றனர். Best Sneakers | Nike nike dunk high supreme polka dot background , Gov