08th April 2021 11:20:48 Hours
பயணக்கைதிகள் மீட்பு மற்றும் தீவிரவாத தாக்குதலை முறியடித்தல் பாடநெறி இலக்கம் 28 இன் 56 கமாண்டோ படையினரும் நாய்களை கையாளும் சிப்பாய்களின் பாடநெறி இலக்கம் 09 இன் 32 பேருமாக நாட்டின் முன்னோடி விதிவிலக்கான செயல்பாட்டுப் படைக்கு மற்றொரு கமாண்டோ படை குழு புதன்கிழமை (7) மாலை கணேமுல்லை கமண்டோ படைத் தலைமையகத்தில் இணைந்துக் கொண்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டார்.
அதிதியின் வாகன தொடரணிக்கான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அன்றைய பிரதம அதிதியினை கமண்டோ படையின் படைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான் மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார்.
பணயக்கைதிகள் மீட்பு மற்றும் பயங்கரவாத செயல்பாட்டுக் கடமைகளைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வகிபங்கில் தகுதி பெற்ற 3 அதிகாரிகள் மற்றும் 53 சிப்பாய்களும் கே 9 போர் நாய்களை கையாளும் பாடநெறி இலக்கம் -9 இல் 32 சிப்பாய்களும் தங்களது அங்கிகாரங்களை பிரதம அதிதி மற்றும் படைத் தளபதியின் பிரசன்னத்துடன் பெற்றுக் கொண்டனர்.
கப்டன் டி கே பி ஜயசேகர சிறந்த குறிபார்த்து சுடும் வீரருக்கான விருதினையும் , பயணக்கைதிகள் மீட்பு மற்றும் தீவிரவாத தாக்குதலை முறியடித்தல் பாடநெறி இலக்கம் 28 இன் சிறந்த மாணவருக்கான விருதினையும் பெற்றுக் கொண்டார். . நாய்களை கையாளும் சிப்பாய்களின் பாடநெறி இலக்கம் 09 இன் சிறந்த நாய்களை கையாளுபவராக கோப்ரல் எச் எல் குணசேகர தெரிவு செய்யப்பட்டார்.
விருது வழங்களின் பின்னர் படையினருக்கு உரையாற்றுகையில் ஜெனரல் சவேந்திர சில்வா தகுதி பெற்றவர்களை வாழ்த்தியதுடன் நாட்டின் நலனுக்காக அவர்களின் கடமைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டினார். இரு பாடநெறிகளிலும் பெறப்பட்ட தகுதிகளின் காட்சிப்படுத்தல் அன்றைய பங்கேற்பாளர்களுக்கு முன்வைக்கப்பட்டது.
பாடநெறி பட்டதாரிகள் இறுதியாக ஒரு குழு படத்தினை எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களின் தனி விளக்கக்காட்சிகளை சமர்ப்பித்தனர்.
இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல, இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ, பணிநிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, பிரதம கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர, பிரதம சமிஞ்சை அதிகாரி மேஜர் ஜெனரல் அசோகா பீரிஸ், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த குணரத்ன, கமாண்டோ படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்குப்பற்றினர். buy shoes | Jordan Ανδρικά • Summer SALE έως -50%