Header

Sri Lanka Army

Defender of the Nation

05th April 2021 20:16:30 Hours

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜெனரல் ஷவேந்திர சில்வா

பாகிஸ்தானின் தேசிய தின நிகழ்வில் வருடாந்த நடத்தப்படுகின்ற கூட்டுப் படை அணிவகுப்பு நிகழ்வில் (மார்ச் 23) இலங்கை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பாகிஸ்தான் ஜனாதிபதி, கூட்டு பதவி நிலை குழு தலைமை தலைவர், இராணுவ பதவி நிலை பிரதானி ,கடற்படைத் பதவி நிலை பிரதானி,விமானப்படைத் பதவி நிலை பிரதானி, மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பாக்கிஸ்தான் இராணுவத்தின் இராணுவ வலிமை, அதன் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள், மல்டி பெரல்கள், ஜெட் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் பிற வன்பொருள்களைக் காண்பிக்கும் நிகழ்வும் மற்றும் கண்கவர் அணிவகுப்புகளுடன், வான்வழி சாகசங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான சிறந்த விமான சாகசங்கள் என்பனவும் நிகழ்வில் சிறப்பம்சங்களாக அமைந்தன.

பாகிஸ்தானின் முக்கிய நிகழ்வில் பாகிஸ்தான் படையினருடன் இணைந்து இலங்கை இராணுவ விசேட படையின் பரசூட் குழுவினரும் 12,000 அடி உயரத்தில் பரந்து பார்வையாளர்களின் ஆரவாரங்கள் மற்றும் கரகோசங்களுக்கு மத்தியில் சாகசங்களை நிகழ்த்தியதுடன், இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் மார்ச் 25 ஆம் திகதி அதிகளவான பங்கேற்பாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

பாகிஸ்தான் இராணுவத்தின் நிரந்தர இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மாற்றுத்திறளாளி படையிளருடன் இணைந்து நிகழ்த்திய அணிவகுப்பில் பிரதம அதிதியான பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அலி, சிறப்பு விருந்தினர் ஜெனரால் ஷவேந்திர சில்வா, பாகிஸ்தான் இராணுவத் தளபதி மற்றும் ஏனைய பிரதம விருந்தினர்கள் பங்கேற்றிருந்தமையும் சிறப்பம்சமாகும்.

அதனையடுத்து பாகிஸ்தான் ஜனாதிபதியால் தேசிய தின நிகழ்வின் பங்கேற்பாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டதுடன். லாஹூர் மற்றும் கராச்சியிலுள்ள பாகிஸ்தானின் ஸ்தாபக தலைவர்களின் நினைவுச் சின்ங்களில் மலர் மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ வனசிங்க, மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் தளபதியின் விஜயத்தில் பங்கேற்றனர்.

பாகிஸ்தானின் தேசிய தினம் நாடு முழுவதிலும் பொது விடுமுறை தினமான அனுட்டிக்கப்படுவதுடன், அன்றைய தினத்தில் இராணுவத்தின் அணிவகுப்பு நிகழ்வுகள் , துப்பாக்கி வேட்புக்கள், அரச மற்றும் தனியார் நிறுவன கட்டிடங்களில் தேசிய தின கொடிகளை ஏற்றி அனுட்டித்தனர். jordan release date | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger