Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2021 16:31:05 Hours

மைலங்கரச்சி விஹாரையின் தாது கோபுரம் படையினரின் ஒத்துழைப்புடன் திறந்து வைப்பு

வெலிகந்த பகுதியில் உள்ள மைலங்கரச்சி ஸ்ரீ மஹிந்தராமா விஹாரையில் இராணுவம் மற்றும் அப்பகுதியில் உள்ள பக்தர்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தாது கோபுரத்தை திறப்பதற்கான நிகழ்வு மார்ச் 27-28 திகதிகளில் இடம் பெற்றது.

இந்த திட்டமானது 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே மற்றும் 6 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.பி.ஏ சேனாரத்ன ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, இரவு முழுவதுமாக பிரித் பாரயணம் செய்த பிக்குகளுக்கான தானம் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

இக் கட்டுமான பணிக்கு வாதுவையை சேர்ந்த திரு கே.பி. திசேரா அவர்களால் 1.6 மில்லியன் ரூபாய் நன் கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த நிகழ்ச்சியின் கண்காணிப்பாளர்களது ஆலோசனையின்படி பௌர்ணமி தினமான (28) அன்று 'சில்' அனுட்டானங்களும் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தன. Sports Shoes | Nike News