05th April 2021 15:16:30 Hours
இன்று காலை (5) பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகள் உட்பட பாதுகாப்பு அதிகாரிகளின் உள்ளடங்களான உயர் மட்டக் குழுவினர், கொழும்பு 2 இல் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு விஜயத்தை மேற்கொண்டதுடன் அதன் புதிய கட்டுமானப் பணிகள், மீள்புனரமைப்பு மற்றும் ஏனைய நிர்வாக முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்தனர்.
பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தன, விமானப்படைத் தளபதி ஏயா மார்ஷல் சுதர்ஷன பதிரன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், உதவி கல்வி பணிப்பாளர் செல்வி எம்.எஸ். ஹசினி தலகல ஆகியோரை கல்லூரியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டபள்யூ.ஆர். பலிக்ககார (ஓய்வு), அதிபர் திரு நிரோசன் ஒபதா மற்றும் ஏனைய அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஏனையோர்கள் ஜூனியர்ஸ் நூலகம், செயல்பாட்டு அறைகள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பிரதி அதிபர் அலுவலகம் மற்றும் புனர்நிர்மாண மற்றும் கட்டுமானத்தின் கீழ் உள்ள ஏனைய கட்டிடங்களை பார்வையிட்டனர்.
வருகை தந்த குழுவினர் வளாகத்தில் வெவ்வேறு கட்டுமாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தங்களது வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான ஆலோசனைகளையும் வழங்கியதுடன், திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் சுட்டிக்காட்டினர். Nike shoes | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys