04th April 2021 08:43:34 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 12 வது படைப்பிரிவு தலைமையகம் வெள்ளிக்கிழமை (2) தனது 10 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியதுடன் நிகழ்வின் பிரதம அதிதியாக 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க கலந்துக் கொண்டார்.
ஆண்டு நிறைவை முன்னிட்டு, வெஹரகோதன விகாரையில் விஷேட போதி பூஜை ஒன்றும் நடைபெற்றதுடன் அன்றைய தினம் (02) படையினரால் 10 பௌத்த தேரர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்தோடு விகாரையின் தலைமை தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆண்டு நிறைவை முன்னிட்டு விகாரை வளாகத்தில் சிரமதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் குழு படம் எடுக்கும் நிகழ்வு மற்றும் அனைத்து நிலைகளுக்குமான மதிய விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், 12 பிரிவின் கீழுள்ள பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். Best jordan Sneakers | Air Max