Header

Sri Lanka Army

Defender of the Nation

05th April 2021 21:08:15 Hours

212 பிரிகேடினால் தம்பியாவ பிரதேசத்தில் தாயொருவருக்கு புதிய வீடு கையளிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்படுக்கப்பட்ட வீடு கட்டுமானத் திட்டத்துக்கமைய தந்திரிமலை, தம்பியாவ பகுதியில் உதவியற்ற குடும்பமொன்றின் தாயொருவருக்காக கட்டப்பட்ட வீடு சனிக்கிழமை (03) பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் 21 படைப்பிரிவின் 212 பிரிகேடின் 5 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் முறையே 1,4 மற்றும் 8 வயது குழந்தைகளுடைய தாயொருவருக்கே இவ்வாறு வீடு கையளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதி தளபதியும் முன்னாள் 212 வது பிரிகேடின் தளபதியுமான பிரிகேடியர் அனில் பீரிஸ் அவர்களின் முயற்சியால் அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையரான திரு தமித் கஹவே அவர்களால் வழங்கப்பட்ட நன்கொடையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தம்பியாவாவில் புதிய வீட்டை கையளிப்பதற்கான நிகழ்வின் போது பயனாளியான திருமதி ஷாலிகா மது விக்கிரமசிங்க அவர்களுக்கு வீட்டு பாவனைக்கு அவசியமான தளபாட பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின் பிரதம அதிதியாக 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, பிரிகேடியர் அனில் பீரிஸுடன் இணைந்து மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் ரிப்பனை வெட்டி திறந்து வைத்தனர்.

நிகழ்வில் 212 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் ராஜபக்‌ஷ , கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளியின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். Nike Sneakers | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf