04th April 2021 06:43:34 Hours
இலங்கை இயந்திரவியல் காலாட் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சேன வடுகே 4 வது இயந்திரவியல் காலாட் படைக்கு தனது உத்தியோகபூர்வ விஜயமொன்றை வௌ்ளிக்கிழமை (02) மேற்கொண்டார்.
படைத் தளபதியினை லெப்டினன் கேணல் ஆர்ஏஎஸ்ஆர்.ரணசிங்க வரவேற்றதன் பின்னர் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படைத் தளபதி இயந்திரவியல் காலாட் படையின் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக பிரியதர்ஷன, நிலையத் தளபதி பிரிகேடியர் குமார வனசிங்க , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படம் ஒன்றும் எடுத்துக்கொண்டார்.
அவரது உத்தியோகபூர்வ வருகையை குறிக்கும் விதமாக ஒரு மரக்கன்று நடப்பட்டதைத் தொடர்ந்து. அதன் பிறகு அவர் கட்டளை அதிகாரியின் விளக்கத்தினை செவிமடுத்தார். பின்னர் படையினருக்கு உரையாற்றினார். முகாம் வளாக பரிசீலணைக்கு முன்பதாக அனைத்து நிலைகளுடனான தேனீர் விருந்திலும்கலந்துக் கொண்டார்.
இறுதியாக, படைத் தளபதி தனது கருத்துக்களை விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பதிவிட்டார். Nike air jordan Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ