03rd April 2021 17:31:05 Hours
முல்லைத்தீவு, மதவச்சிக்குளம் ,கணுக்கேணி ஆகிய குளங்களில் மீன் குஞ்சிகளை விடுவிக்கும் நிகழ்வு 592 பிரிகேட் தளபதி கேணல் பிரபாத் ஆராச்சிகேவின் தலைமையில் புதன்கிழமை (31) நடைபெற்றது.
59 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் டி சூரியபண்டாரவின் ஆலோசணைக்கமைய முல்லைத்தீவு பகுதியில் உள்ள குளங்களில் மொத்தமாக 410,000 மீன் குஞ்சிகள் விடுவிக்கப்படவுள்ளது, தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
திட்டத்தின் ஆரம்பகட்டமான மீன் வளர்ப்பை அடையாளப்படுத்தும் வகையில் மதவச்சிக்குளம் மற்றும் கணுக்கேணி குளங்களில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திரு எஸ்.சங்கீதன் அவர்களால் விடுவிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் இராணுவ அதிகாரிகளும் கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர். jordan release date | Nike