Header

Sri Lanka Army

Defender of the Nation

04th April 2021 13:43:34 Hours

பௌத்த அமைப்பின் உதவியுடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மக்கள் வங்கியின் பௌத்த சங்கத்தின் நிதி உதவியுடன், வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் வழிக்காட்டலின் கீழ் மடுகந்த பகுதியிலுள்ள 200 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பொதிகளும் திங்கட்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டன.

தளபதியின் வழிக்காட்டலுக்கு அமைவாக 562 வது பிரிகேட்டின் ஆலோசணையில் 15 வது (தொ) மற்றும் 17 வது (தொ) இலங்கை சிங்கப் படை படையணியினரால் கிராம சேவகர் மற்றும் பாடசாலை சமூகம மற்றும் ஆசிரியர்களால் மிகவும் அவசியமுடையவர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே மேற்படி பொருட்கள் மக்கள் வங்கியின் பௌத்த சங்கத்தின் தலைவர் மற்றும் அங்கத்தவர்களின் பங்குப்பற்றலுடன் வழங்கி வைக்கப்பட்டன.

562 பிரிகேடின் தளபதி சேனக பிரேமவன்ச அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டத்துக்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

562 பிரிகேட் தளபதியின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி ஹேமந்த பண்டார அவர்களால் நிவாரணப் பொதிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 56 வது படைப்பிரிவின் தளபதி, 562 பிரிகேடின் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். latest Running Sneakers | nike air force 1 shadow , eBay