Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2021 11:30:29 Hours

இராணுவ பயிற்சிக் கட்டளையின் தளபதி இராணுவ வழங்கல் பாடநெறி அதிகாரிகளை சந்திப்பு

இராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) தளபதி மேஜர் ஜெனரல் சேன வாடுகே திங்கள்கிழமை (29) திருகோணமலை இராணுவப் வழங்கல் பயிற்சி பாடசாலைக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அதன் போது பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர மற்றும் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

நேர்த்தியான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை பரிசீலனை செய்த பின்னர், தளபதிக்கு இராணுவ பயிற்சிக் கட்டளையின் தளபதியினால் அதன் பங்கு மற்றும் பணிகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் வசதிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இராணுவ வழங்கல் பாடசாலையின் தனது வருகையை குறிக்கும் வகையில் இராணுவ பயிற்சி கட்டளையின் தளபதி மேஜர் ஜெனரல் சேன வடுகே மாங்கன்றை நாட்டி வைத்தார். பின்னர் சிவில் ஊழியர்களுக்கு இராணுவ பயிற்சி கட்டளையின் தளபதியால் அவர்களின் சேவையைப் பாராட்டி பரிசுகளும் ஆடைகளும் விநியோகிக்கப்பட்டன.

அதன்பிறகு, வருகை தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், வழங்கல் பணியாளர்கள் பாடநெறி எண் 07 மற்றும் கனிஸ்ட அதிகாரிகள் பாடநெறி எண் 17 இன் பயிலுனர் அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.

அடுத்து, தளபதி பயிற்சி வசதிகள் மற்றும் மணல் மாதிரி அறையைப் பார்வையிட்டார். அங்கு கனிஸ்ட வழங்கல் பாடநெறி எண் 17, “எக்ஸ் ஸ்டீயரிங் வீல்” இன் திட்டமிட்ட இறுதிப் பயிற்சி குறித்த விரிவான விளக்கத்தைப் பெற்றார்.

இராணுவ பயிற்சி கட்டளை விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் ஒரு பாராட்டு குறிப்பை எழுதியதுடன் நல்லுறவு உரையாடலின் முடிவில் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர அவர்களால் இராணுவ பயிற்சி கட்டளை தளபதிக்கு ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இராணுவ பயிற்சிக் கட்டளையின் பிரிகேடியர் பயிற்சி பிரிகேடியர் சந்திர ஜயவீர அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். Buy Kicks | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp