Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2021 07:20:37 Hours

59 வது படையினரால் கோகிலாய் மாணவர்களுக்கு உதவி

59 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் டி.சூரியபண்டாரவின் முயற்சியால் கோகிலாய் சிங்கள பாடசாலை, உடுப்புக்குளம் தமிழ் பாடசாலை, அலம்பில் ரோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த பரிசுத் பொதியில் வாசிகசாலை புத்தகங்கள் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசு மாணவர்களுக்கான மீட்டல் செய்வதற்கான கடந்த கால பரீட்சை வினாத்தாள்கள் அடங்கியிருந்ததுடன் படையினரால் பாடசாலை வளாகம் முழுமையாக பழுது பார்க்கப்பட்டதுடன், சுத்தம் செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.

593 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் வசந்த பலம்கும்புர , சிரேஸ்ட அதிகாரிகளும்,சிப்பாய்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். jordan Sneakers | jordan Release Dates