Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2021 18:01:05 Hours

மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல 51 ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையேற்பு

யாழ்பாணம் 51 ஆவது படைப்பிரிவிற்கு 29 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்கள் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (02) காலை கடமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதற்கமைய படைத் தலைமைய வளாக மைதானத்தில் மரியாதை அணிவகுப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், இராணுவ சம்பிரதாய முறைப்படி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

மகா சங்க உறுப்பினர்களின் மத ஆசிர்வாததுக்கு மத்தியில் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வின் நினைவாக புதிய தளபதி படைத் தலைமையக வளாகத்தில் மா மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார்.

பின்னர், படையினருக்கு உரையாற்றிய அவர், பொறுப்பான பகுதியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான திட்டங்களை தங்கள் திறனுக்கு ஏற்றவாறு முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அத்துடன், அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அவர் 51 ஆவது படைப் பிரிவில் சேவை செய்பவர்களுடன் ஓரிரு காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து மகா சங்கத்திற்கு தானம் வழங்கப்பட்டது.

விழாவில் பிரிகேட் தளபதிகள், மற்றும் கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். jordan release date | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth