Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2021 09:45:37 Hours

வன்னி படையினருக்கு அனர்த்த தடுப்பு தொடர்பில் விழிப்புணர்வு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிகாட்டலுக்கமைய அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான வழிப்புணர்வு அமர்வொன்று பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினருக்காக வியாழக்கிழமை (01) நடத்தப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் திரு. சுதத் திஸாநாயக்க அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூஎம்பிஎம் விஜேசூரிய, கடற்படை இணைப்பு அதிகாரி கொமண்டர் டிஎச்கே ஹேரத், ஆகியோரால் விரிவுரைகள் நடத்தப்பட்டன.

இயற்கை பேரழிவுகளின் தன்மை, முகாமைத்துவம் மற்றும் பேரழிவுகளைத் தணித்தல் என்பவற்றை அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னர் மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் படையினருக்கு இந்த பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது. எந்தவொரு அவசர காலத்திலும் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை, அரசாங்க நிறுவனங்களுடனான தொடர்புகளை ஏற்படுத்துதல் தொடர்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

69 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். Adidas footwear | Nike Off-White