03rd April 2021 05:30:37 Hours
3 வது (தொண்டர்) இலங்கை இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை படையணியின் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் 95 ஆவது விவசாய பீட மாணவர்களுடன் இணைந்து வெலிகந்த கோட்டக் கல்வி காரியாலயத்தின் மலிந்த ஆரம்ப பாடசாலை, மதுரங்கல ஆரம்ப பாடசாலை மற்றும் மொனரதென்ன ஆரம்ப பாடசாலை ஆகியவற்றின் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை சனிக்கிழமை (27) வழங்கி வைத்தனர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொதிகளில் பாடசாலை பைகள், தண்ணீர் போத்தல்கள், சாப்பாட்டு பெட்டிகள், பாடசாலை சீருடைகள், பாதணி ஜோடிகள் என்பன அடங்கியிருந்ததுடன் மேற்படி பகுதியிலுள்ள 3 வறிய பாடசாலைகளை சேர்ந்த 120 மாணவர்களுக்கு 3 வது (தொண்டர் ) இலங்கை இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎல்சீஎன் முத்துதந்திகே அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
3 வது (தொண்டர்) இலங்கை இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடை படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள், பேராதனை பல்கலைக்கழகத்தின் 95 வது விவசாய பீட மாணவர் குழு, ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். Running Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ