Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2021 12:01:05 Hours

இராணுவ தொண்டர் படையின் 140 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வு

இலங்கை இராணுவ தொண்டர் படையின் 140 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு 01 ஏப்ரல் 2021 அன்று மத அனுட்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொடவின் வழிக்காட்டல்களுக்கமைய இடம்பெற்றது.

இதன்போது இலங்கை இராணுவ தொண்டர் படையின் கலைஞர்களினால் வண்ணமயமான ஊர்வலமாக பௌத்த தேரர்கள் அழைத்து வரப்பட்டதன் பின்னர் இரவும் முழுவதுமான மகா சங்கத்தினரின் பிரித் பாராயண நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியால் கும்பம் வைக்கப்பட்டதுடன் மகா சங்கத்தின் சொற்பொழிகள் இடம்பெற்றன.

இலங்கை இராணுவ தொண்டர் படையின் தலைமையகமத்தினால் 30ம் திகதி செவ்வாய்கிழழை (30) ஹங்வெல்ல செந்தி செவன முதியோர் இல்லம், கொஸ்கம சர்வோதைய சுவசெத சிறுவர் இல்லத்தில் தூய்மையாக்கள் பணிகளை மேற்கொண்டதுடன் அங்குள்ளவர்களுக்கு தானம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. 31ம் திகதி மகா சங்கத்தினருக்கான தானம் வழங்கும் நிகழ்வுகளுடன் மத நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

ஆண்டு நிறைவு தினத்தில் (ஏப்ரல் 1) இலங்கை பீரங்கிப் படையின் படையினரால் பாதுகாவலர் அறிகையிடல் மரியாதை , அணிவகுப்பு மரியாதை என்பன மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவுக்கு வழங்கப்பட்டது.

அன்றைய விழாவின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, நாட்டிக்காக உயர் தியாகமான போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு தளபதியால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தளபதியின் படையினருக்கான உரையின் போது, இலங்கை இராணுவ தொண்டர் படையின் எதிர்காலத்திலும் சிறப்பாக செயற்பட வேண்டும் என்றும், இராணுவத்தின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதனைடுத்து அனைத்து நிலைகளுக்குமான மதிய விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

1881 ஏப்ரல் 01 ஆம் திகதி லெப்டினன்ட் கேணல் ஜோன் ஸ்காட் ஆர்மிடகேயின் கட்டளையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தொண்டர் படை 1899-1902 முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்பு பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக பாராட்டத்தக்க வகையிலான சேவையினையும் ஆற்றியுள்ளது.

கொண்டட்ட நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையின் அனைத்து படையலகுகளையும் பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் தலைமையக கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் பங்கேற்புடன் கொவிட் – 19 தொற்றுநோய்க்கான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர். best Running shoes brand | adidas Yeezy Boost 350