Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2021 09:01:37 Hours

யாழ். தளபதி நாவட்குழி உள்ள கிராமவாசிகள் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் நாவட்குளியுள்ள பகுதியில் வசிக்கும் கிராமவாசிகளின் தேவைகள் தொடர்பில் தேடி அறியும் நோக்கில் யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா செவ்வாய்க்கிழமை (30) அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சமிதி சுமன வழிபாட்டு தளத்தில் கிராமவாசிகளுடன் சுமூகமாக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

கலந்துரையாடல்களின் ஆரம்பத்தில் வண. ஹங்வெல்லே ரத்னசிறி தேரர் மத வழிபாடுகளை நிகழ்த்தியதுடன் வருகைத் தந்த யாழ்ப்பாணத் தளபதி மக்களின் வாழ்க்கைத் தரம் காணி பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் பிரச்சினைகள் என்பன தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்தார்.

அதனையடுத்து குறித்த சந்திப்பில் அறியப்பட்ட விடயங்களுடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடி மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். நிகழ்வின் நிறைவின் மக்களுக்கு அவசியமான உலர் உணவு பொதிகளும் தளபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் 52 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ், 523 வது பிரிகேட் தளபதி கேணல் காவிந்த பாலசூரிய, 12 வது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜீ.டி.டி.கே. கணகே, சிரேஸ்ட அதிகாரிகள்,நாவட்குளி கிராமத்தின் பொதுமக்களும் கலந்துகொண்டதுடன், பெரும்பாலும் இந்த கிராமத்தில் சிங்களவர் குடும்பங்களே உள்ளமையும் அவர்கள் சிலர் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தவர்களை திருமணம் செய்துள்ளமை குறிப்பிடதக்கவிடயமாகும். buy footwear | nike