02nd April 2021 08:00:37 Hours
இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரு ராகேஷ் நடராஜ் அவர்கள் கண்டி பல்லேகலையிலுள்ள 11 வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டு 11 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் தளபதி சாரத சமரகோன் அவர்களை வெள்ளிக்கிழமை (26), சந்தித்தார்.
படைப்பிவு தளபதி அலுவலகத்தில் நடைபெற்ற நல்லுறவு கூட்டத்தின் போது மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் இராணுவத்தின் சமூக சேவைகள், கண்டி மாவட்டத்தில் கொவிட் - 19 தடுப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான கருத்துகளை பரிமாறிக் கொண்டதுடன் சந்திப்பின் நிறைவில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.
கலந்துரையாடலின் போது 11 வது படைப்பிரிவு தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். jordan Sneakers | Men's Footwear