Header

Sri Lanka Army

Defender of the Nation

01st April 2021 08:09:15 Hours

பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலை வளாகத்தில் இலங்கை இராணுவ பிரதிநிதிகளுக்கு சிறப்பு வரவேற்பு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அண்மையில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் ஒரு அங்கமாக பஞ்சாப் , வா கெண் பகுதியில் உள்ள பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலையை பார்வையிடுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது இலங்கை இராணுவ பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வரவேற்பை தொடர்ந்து, இலங்கை இராணுவ தளபதி, பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலை தலைவர் லெப்டினன் ஜெனரல் அலி அமீர் அவான், இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாகயம் மேஜர் ஜெனரல் சஞ்ஜய வணசிங்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதி குழுவினர் இணைந்து பாகிஸ்தான் இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உன்னிப்பாக மேற்பார்வை செய்ததுடன் அங்கு சர்வதேச தரத்திற்கு அமைவான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள், வணிக பொருட்கள், அலுமினிய மூலப்பொருள்கள் உற்பத்தி, வேட்டை வெடி மருந்துகள், பித்தளை பாதுகாப்பு தயாரிப்புகளை உன்னிப்பாக கவனித்தனர். சர்வதேச தரத்திற்கு வழக்கமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பெருமளவில் உற்பத்தி செய்தல், வணிக வெடிபொருட்கள், வேட்டை வெடிமருந்துகள், பித்தளை, செப்பு மற்றும் அலுமினிய உற்பத்தி, இராணுவத்தின் பயன்பாடுகளுக்கு எடுக்கப்படாத பொருட்களின் உற்பத்திகள் என்பன பற்றியும் ஆராய்ந்தனர்.

அதிநவீன துணி வெட்டும் வசதிகள் மற்றும் நவீன தையல் அலகுகளைக் கொண்டதும் இராணுவ சீருடைகளைத் தயாரிக்கின்ற ஒரு ஆடைத் தொழிற்சாலையாகவும் இது காணப்படுகிறது.

சிரேஷ்ட கட்டளை அதிகாரிகள், அவர்களின் துணைவர்கள் மற்றும் சிப்ய்கள் ஆகியோர் அங்கு வருகை தந்த இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சுஜீவா நெல்சன், இராணுவ தலைமையகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு இணைப்பாளர்,இராணுவ செயலாளர் மற்றும் சில அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

விஜயத்தின் நிறைவில் பாகிஸ்தான் இராணுவ ஆயுத தொழிற்சாலையின் தலைவர் லெப்டினன் ஜெனரல் அலி அமீர் அவான் மற்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டதுடன் விருந்தினர் பதிவேட்டில் ஜெனரல் ஷவேந்திர சில்வா எண்ணப் பகிர்வுகளை பதிவிட்ட பின்னர் சகலரும் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். Running sports | Nike sneakers