02nd April 2021 21:03:38 Hours
Theகாகுல் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் சுமார் 2000 வெளிநாட்டு அதிகாரிகள்கு பயிற்சி அளிக்கும் திறனை கொண்ட பாகிஸ்தான் இராணுவ பயிற்சி கல்லூரி இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சிவப்பு கம்ளம் விரித்து வரவேற்பளிக்கப்படடது.
Theபாகிஸ்தான் இராணுவ கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஓமார் புகாரி அவர்களின் அழைப்பினை ஏற்று ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்படி கல்லூரிகும் விஜயம் செய்திருந்தார்.
Theஇதன்போது பாகிஸ்தான் இராணுவ கல்லூரியின் கெடட் அதிகாரிகளால் தளபதிக்கு பாதுகாவர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பாகிஸ்தான் இராணுவ கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஓமார் புகாரி அவர்களும் வரவேற்றார். பின்னர் பாகிஸ்தான் இராணுவ கல்லூரியில் உள்ள உயிர் நீத்த பாகிஸ்தான் படை வீர்ர்களின் நினைவுத்தூபிக்கு நினைவஞ்சலி செலுத்தினார். பின்னர் அக்கல்லூரியின் பங்களிப்பு மற்றும் பணிகள் தொடர்பாக தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகளும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பாகிஸ்தான் இராணுவ கல்லூரியின் கட்டளை தளபதிக்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கை இராணுவத்திற்கு பாகிஸ்தான் இராணுவ கல்லூரி வழங்கிய உதவிகளை நினைவுகூர்ந்ததுடன் கல்லூரி வளாகத்தையும் மேற்பார்வை செய்தார்.
Theஅதனையடுத்து ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் அவருடன் சென்றிருந்த பிரதிநிதிகள் குழுவும் பயிற்சி அதிகாரிகளான கெடட் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன், அவர்களுடன் எண்ணங்களை பகிர்ந்துக்கொண்டனர், அதனையடுத்து அவர்களுடைய ஏற்பாடுகளுக்காக பாராட்டு தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா விருந்தினர் நினைவேட்டிலும் பதிவிட்டதுடன், நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். இராணுவ நிறைவேற்று பணிப்ளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் பாகிஸ்தான் இராணுவ கல்லூரிக்கான விஜயத்தில் இணைந்துகொண்டனர். Buy Kicks | Air Jordan Release Dates 2020