01st April 2021 06:39:15 Hours
பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், பாகிஸ்தான் படைகள் மற்றும் இந்திய பாதுகாப்பு படையினர் ஒன்றிணைந்து கூட்டாக அத்தாரி – வாகா எல்லைப் பகுதியில் வழமையாக மேற்கொள்ளும் கொடியிறக்கும் அணிவகுப்பு விழாவிற்கு சென்றிருந்தார்.
இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியின் பஞ்சாப் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஜெனரல் அமீர் மஜீத் அவர்களால் வரவேற்கப்பட்ட பின்னர், சிப்பாய்களால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதன்போது எல்லைப் பகுதியில் கொடியிறக்கும் நிகழ்வை தளபதி கண்டுகளித்ததுடன், அங்குள்ள படையினருடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். அதே சமயத்தில் பாகிஸ்தான் படையினரில் வாத்திய இசையுடன் கூடிய பாரம்பரிய அம்சங்கள் அடங்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பின்னர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியார் ஜெனர் முஹம்மது அமீர் மஜீத் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, எல்லைப் பகுதியிலிருக்கும் படைகளின் நல்லிணக்கம், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகள், தொடச்சியான பயிற்சிகள் என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் ஜெனரல் அமீர் மஜீத் அவர்களின் பாரியாரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.இறுதியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா விருந்தினர் பதிவேட்டிள் எண்ணப் பகிர்வுகளை பதிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் பாகிஸ்தான் கலைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய தயாரிப்புக்களின் கண்காட்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டமை சிறப்பம்சமாகும்.
அட்டாரி – வாகா எல்லையில் கொடிகளை இறக்கி வைக்கும் நிகழ்வு அன்றாடம் இடம்பெறும் என்பதுடன், இது இந்திய – பாகிஸ்தான் படைகளால் 1959 ஆம் ஆண்டு முதல் கூட்டாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையாகும். இந்த வண்ணமயமான நடைமுறையானது இரு நாடுகளின் போட்டியின் அடையாளமாகவும், இரு நாடுகளுக்கிடையிலான சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பாகவும் உள்ளது.
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய பாகிஸ்தான் படையின் சிப்பாய்கள் கைகுலுக்கும் செயற்பாடுகள் , பாதுகாவலர் அணிவகுப்பு சிறப்பான காட்சிகளாக அமைந்திருப்பதுடன், அமிர்தசரஸ் மற்றும் லாகூர் பகுதிகளுக்கிடையில் இந்தோ – பாக் எல்லையில் உள்ள கட்டிடங்கள் சாலைகள் மற்றும் தடைகள் அமைந்துள்ள பகுதியில் மாலை நேரத்தில் இடம்பெறும் விழா சிறப்புக்குரியதாகும். இரு நாடுகளினதும் சிப்பாய்கள் கொடிகளை இறக்குவதற்கான அணிவகுப்பாச் செல்வதுடன், சூரியன் மறையும் போது கொடிகள் இறக்கப்பட்டு, தேசியத்துவத்தை மேம்படுத்தும் வகையில் வாத்திய முழக்களுக்கிடையில் தினத்தின் நிறைவை குறிக்கும் வகையில் மின் விளக்குகளும் அனைக்கப்படுகின்றன. buy shoes | Archives des Sneakers