31st March 2021 20:17:00 Hours
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கும் விவசாய பரிமாணங்களை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பாக ஹுனுபிட்டிய கங்காரம விகாரைக்கு இணைந்த ஸ்ரீ ஜினரதன கல்வி சபையில் 'செழிப்பான, திரமான, மனபூர்வமான' தொலைக்காட்சி அலைவரிசையான 'ஹரித தொலைக்காட்சி இன்று (31) அறிமுகப்படுத்தப்பட்டது.
அஸ்கிரிய பீடத்தின் வண. ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் டயலொக் 16 மற்றும் PEO டிவி அலைவரிசை 09 களின் ஹரித தொலைக்காட்சியினை.
கங்காரமய விகாரையின் பிரதி தலைமை தேரர் வண. கலாநிதி கிரிந்தே அஸ்சாஜி தலைமை தேரரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதே வேளை ஜனாதிபதியினால் அதன் வலைத்தளம் (www.harithatv.com) மற்றும் அதன் குறியிசைப் பாடலையும் தொடங்கினார். இந்த நிகழ்விற்கு மேலும் மதிப்பைச் சேர்க்கும் வகையில் வண. கலாநிதி கிரிந்தே அஸ்சாஜி தலைமை தேரர் கலந்துக் கொண்டவர்களுக்கு ஜனாதிபதி ஊடாக மரக்கன்றுகளை பகிர்ந்தளித்தார்.
பிற மதங்களின் மதத் தலைவர்கள், ஜனாதிபதி ஆலோசகர்கள், தூதுவர்கள், மேல் மாகாண ஆளுநர் விமானப்படை மார்ஷல் ரோஷன் குணதிலக்க, கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கௌரவ அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டனர்.
புதிய விவசாய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் மற்றும் அறுவடைகளுக்கான வாய்ப்புகளை பெருக்குவதற்கும் நவீன நுட்பங்களை பின்பற்றுவதற்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கும் ஒரு புதிய முயற்சி புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது. பாரம்பரிய மத கலாசாரங்கள் மற்றும் பண்டைய உரங்கள் ஊடாக விவசாய பொருளாதாரத்தை நட்பு விவசாய நடைமுறைகள் மேம்படுத்துவதற்கும். மீன்வளத் துறை முன்னேற்றங்கள் மற்றும் உலகளாவிய விவசாய நடைமுறைகளையும் பின்பற்றுவதற்கும் நோக்கமாக கொண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. Nike air jordan Sneakers | Nike