Header

Sri Lanka Army

Defender of the Nation

31st March 2021 10:53:55 Hours

எதிரிகளின் மறைவிடங்களை தாக்குவதற்கான ‘ஷேக் ஹேண்ட்ஸ் – 1’ கள பயிற்சிகளின் ஒத்திகை நிறைவு

சாலியபுர கஜபா படையினரால் பாகிஸ்தான் படையினருடன் இணைந்து 15 நாட்களாக முன்னெடுத்த 'ஷேக் ஹேண்ட்ஸ் – 1 கள பயிற்சி ஒத்திகை நிகழ்வுகள் இன்று (30) நிறைவை எட்டியது. இதன் போது எதிரிகளின் மறைவிடங்களை மறைந்திருந்து தாக்குவதற்கான பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கைக்கான பாக்கிஸ்தானின் உயர் ஸ்தானிகரும் 'ஷேக் ஹேண்ட்ஸ்’ பயிற்சிகளின் திட்ட வடிவமைப்பாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) அதிமேதகு. முஹம்மது சாத் கட்டாக் மற்றும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சி்ல்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் பன்முகத் திறன்கள் உள்ளக போர் தந்திரோபாயங்கள், எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்கள் உபாயங்கள், நவீன பயிற்சி முறைகள் என்பன உள்ளடங்கியிருந்தன. புதன்கிழமை (17) இப் பயிற்சிகள் முதல் முறையாக கஜபா படையணி தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இப் பயிற்சியில் பாக்கிஸ்தான் இராணுவத்தின் 06 அதிகாரிகள் மற்றும் 35 படையினர்களும், இலங்கை இராணுவத்தில் கஜபா படையணியின் 4 அதிகாரிகள் மற்றும் 40 படையினர்களும் பங்கேற்றனர்.

இப் பயிற்சி முன்னாள் பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் சஞ்ஜீவ பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் முன்னாள் பிரதி பணிப்பாளர், இரண்டு கட்டுப்பாட்டாளர்கள், இரண்டு மேற்பார்வையாளர்கள், இரண்டு மதிப்பீட்டாளர்கள் மற்றும் ஒரு வழங்கல் அதிகாரி, காலாட்படை பணிப்பகத்தின் பணிபாளர் நாயகம் மேஜர் ஜெனரல் திலக் ஹங்கிலிபொல ஆகியோர்களின் ஏற்பாட்டடில் இடம் பெற்றது.

செவ்வாய்க்கிழமை (30) இடம் பெற்ற இப் பயிற்சியில் கஜபா படையணியினரால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத மறைவிடத்தில் படையினர் நிலைநிறுத்தப்பட்டு, மறைவிடங்களில் இருந்து போலி தாக்குதல், எதிரிக்கு எதிரான இந்த இறுதி தாக்குதல் பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, இதற்கிடையில், தாக்குதலின் முடிவில் இராணுவத் தளபதி அனைத்துப் படையினருக்கும் உரையாற்றினார். அத்துடன் இரு நாடுகளுக்கிடையே நன்றியைக் குறிக்கும் வகையில் நினைவுச்சின்னங்களும் அந்த இடத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

'ஷேக் ஹேண்ட்ஸ் – 1 பயிற்சிகளுக்கான தந்திரோபாய இராணுவ நடவடிக்கைகள், உள்ளக பாதுகாப்பு மற்றும் எதிர் புரட்சிகர போர் தந்திரோபாயங்கள், பயங்கரவாதம் / தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு இராணுவத் தாக்குதல்கள், உயிர்வாழ்வு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் மிகவும் யதார்த்தமான காட்சிகளையும் சூழ்நிலைகளையும் வழங்கியது. பயங்கரவாதிகளின் மறைவிடங்கள், தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் வெடிபொருட்களை அடையாளம் காணுதல், பயங்கரவாத எதிர்ப்பு சூழலில் உளவுத்துறை சேகரிப்பு, கிளர்ச்சியாளர்கள் மீது உளவுத்துறை, தாக்குதல்களை நிறைவேற்றுதல் போன்ற பயிற்சிகளை கஜபா படையணியின் படையினர் மற்றும் விஜயபாகு காலாட்படை படையணியின் படையினர்கள் இணைந்து வழங்கினர். அதற்கமைய புதன்கிழமை (31) வண்ணமயமான விருது வழங்கும் விழாவுடன் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடதக்க விடயமாகும். bridge media | Jordan Release Dates , Iicf