Header

Sri Lanka Army

Defender of the Nation

24th March 2021 19:13:33 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உற்பத்திறன் தொடர்பாக மற்றுமொரு பயிற்சிநெறி

இளைஞர்களின் உற்பத்தித்திறன் மற்றும் தேசத்துக்கான அர்ப்பணிப்பு', 'போர் இலக்கியம்' மற்றும் 'அறிவுக்கும் புரிதலுக்கும் இடையிலான பரிமாற்றம்' போன்ற விடயப்பரப்புகள் தொடர்பான இரு நாள் பயிற்சி பட்டறையொன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மார்ச் 24 - 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் இணைந்து இராணுவத் தலைமையகத்தின் உளவியல் பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி அமர்வில் உளவியல் பணிப்பகத்தின் லெப்டினன்ட் கேணல் பி.ஜி.எஸ் சமந்தி, மேஜர் சுஜித் சமிந்த , மேஜர் டி.பி.ஜி.கே.பி அல்விஸ் ஆகியோரால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில் 164 அதிகாரிகள் மற்றும் 150 ஏனைய இராணுவ சிப்பாய்களும் கலந்து கொண்டனர். Asics shoes | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat