24th March 2021 13:40:33 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது ஆண்டுவிழாவின் இறுதி நிகழ்வுகள் மார்ச் 16 - 18 ம் திகதிகளில் வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வுகளில் படையினர்களிடையே நட்புறவு விளையாட்டுக்கள், மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விநியோகம், 'அபிமன்சலா - 1' க்கான விஜயம், போர்வீரர்களை நினைவு கூர்தல், படையினருக்கான உரை, அனைத்து நிலைகளுடனான மதிய உணவு, மரம் நடுதல் மற்றும் பல சிவில் சமூக நலத்திட்டங்கள் என்பன மத ஆசீர்வாதங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
மார்ச் 16 ம் திகதி ‘பிரித்’ பாராயணமும், மறுநாள் 20 பௌத்த பிக்குகளுக்கு தானம் வழங்களுடன் ஆண்டு நிறைவு விழாக்கள் தொடங்கப்பட்டது. இவற்றில் பிரிகேட் தளபதிகள், கட்டுப்பாட்டு அலகுகளின் கட்டளை அதிகாரிகள் , சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
கொண்டாட்டங்களின் நிறைவாக வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி , பிரிகேடியர் பொதுப் பணி மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குப்பற்றலில் சிப்பாய்கள் உணவறையில் மதிய உணவுஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Running Sneakers | Nike Off-White