Header

Sri Lanka Army

Defender of the Nation

24th March 2021 14:40:33 Hours

வன்னி தளபதி 4 வது சமிஞ்சை படையினரை சந்திப்பு

வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார செவ்வாய்க்கிழமை (23) 4 வது இலங்கை சமிஞ்சைப் படைக்கு அதன் பணிகள் மற்றும் வகிபாங்கு தொடர்பாக விளக்கம் பெறுவதற்கு விஜயம் மேற்கொண்டார்.

4 வது இலங்கை சமிஞ்சைப் படையின் கட்டளை அதிகாரியால் வரவேற்ற பின்னர் நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. விஜயத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டிவைத்த அவர் பின்னர் படையினருக்கு உரையாற்றினார்.

இறுதியில் அனைத்து நிலைகளுக்குமான மதிய உணவிற்குப் பின்னர் அவர் அதிதிகள் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டதன் பின்னர் வெளியேறினார். Sports Shoes | THE SNEAKER BULLETIN