Header

Sri Lanka Army

Defender of the Nation

24th March 2021 21:08:15 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் பயிற்சிப் பெற்று 188 பேர் வெளியேறல்

தியதலாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சிபாடசாலையில் பாடநெறி இலக்கம் 79 இல் பயிற்சி பெற்று நூற்று எண்பத்து எட்டு (188) செவ்வாய்கிழமை (23) விடுகை அணிவகுப்புடன் வெளியேறியுள்ளனர்.

நான்கு மாத அடிப்படை ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களின் விடுகை அணிவகுப்பின் பிரதம அதிதியாக மத்திய பாதகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே தளபதிகலந்து கொண்டார்.

இராணுவ ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் வழிக்காட்டலில் கொஸ்கம இராணுவ தொண்டர் படைத் தலைமையகம், இராணுவ பயிற்சிக் கட்டளைகள் மற்றும் ஆட்சேர்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பு மையம் ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் 2020 நவம்பர் மாதம்23 ம் திகதி முதல் 2021 மார்ச் மாதம்23 ம் திகதி வரை பாடநெறி இல79 நடாத்தப்பட்டது.

அன்றைய பிரதம அதிதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்குவதற்கு முன்னதாக தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் எச்.ஏ. கீர்த்திநாத வரவேற்றார்.பின்னர்அவர் அங்கிருந்து அணிவகுப்பை பரிசீலனை செய்த பின்னர் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.

அணிவகுப்பு மரியாதையினை பயிற்சி பாடசாலையின் பிரதம பயிற்சி ஆலோசகர் மேஜர் எம்.டபிள்யூ விஸ்வாமித்ர கட்டளையிட்டார்.

இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சத்தியம் செய்தனர், ஒவ்வொருவரும் இராணுவத் தளபதியின் தற்போதைய ‘துரு மிதுரு நவரட்டக்’ திட்டத்தின்படி விடுகை அணிவகுப்பில்ன் மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர், அன்றைய பிரதம அதிதி ஆட்சேர்ப்பு பாடநெறி இல79 இன் சிறந்த திறன்களை வெளிப்படுத்தியவர்களுக்கு சிறந்த கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களைவழங்கினார். எழுத்து, செயன்முறை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் அதி கூடிய புள்ளிகளை பெற்றுக் கொண்ட சாதாரண சிப்பாய் பண்டாரபி.ஜி.சி தெரிவு செய்யப்பட்டார். சிறந்த உடற்பயிற்சி சிப்பாயாக எம்.என் நிம்சார விருதைப் பெற்றார். சிறந்த குறிபார்த்து சுடும் வீரராகசிப்பாய் கே.டி.சங்கல்பகைப்பற்றிக் கொண்டார். பரிசு வழங்கும் நிகழ்வில் பயிற்சி பாடசாலையின் தளபதியும் பிரதம அதிதியுடன் காணப்பட்டார்.

பிரதம அதிதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே உரையாற்றுகையில் அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார். மேலும் எதிர் காலத்தில்தொண்டர் படையின் கண்ணியத்தையும் பெருமையையும் காக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் T.M.G.G.S தென்னகோன், குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்நைபர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் W.T.W.G இயலகேஇலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதி தளபதி பி.ஏ.எம். பீரிஸ்,111 வது பிரிகே தளபதி பிரிகேடியர் அனுரா திசாநாயக்கமற்றும் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத்கொட்டுவே கொட அவர்கள் சார்பாக அதன் பயிற்சி பரிசோதகர் பிரிகேடியர் எஸ்.என். சமரவிக்ரம ஆகியோர் இவ் விடுகை அணிவகுப்பு மரியாதையில் கலந்துக் கொண்டனர். latest Nike Sneakers | jordan Release Dates