Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd March 2021 21:23:33 Hours

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான ஆரம்பிப்பு

கிளிநொச்சி 'மாஸ் இன்டிமேட்ஸ் விடியல் ஆடை தொழிற்சாலையின் அழைப்பின் பேரில் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் திங்கள்கிழமை (22) ஆடைத் தொழிற்சாலையினை பார்வையிட்டதுடன் நிர்வாகத்துடன் கிளிநொச்சி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மேலும் புதிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்புக்கள்தொடர்பாக கலந்துரையாடினார்.

இந்து சமய சம்பிரதாய முறைப்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியைமேலதிக பிரதி பொது முகாமையாளர் திரு.உதார விஜேசூரிய அவர்களால் வரவேற்கப்பட்டார்.

பின்னர் உற்பத்தி செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அதன் பின்னர் களபயணத்தை மேற்கொண்டு உற்பத்தி செயல்முறையினை பார்வையிட்டார்.

இந்த சந்திப்பின் போது கிளிநொச்சி பிரதேசத்தில்குறைந்த வருமானத்தில் வாழுபவர்களுக்கும்கிளிநொச்சி இள வயதுடையவர்களுக்குஅதிகமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான சாத்தியங்களை அவர் ஆராய்ந்தார். இரவு நேரத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதிமேஜர் ஜெனரல் பியால் நானாயகரவசம், 66வது படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க, பிரிகேடியர் பொது பணிபிரிகேடியர் சமன் லியனகே மற்றும் சிலசிரேஸ்ட அதிகாரிகள் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர். jordan Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ