Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd March 2021 16:46:58 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின நிறைவாண்டினை முன்னிட்டு மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள்

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் நிறைவாண்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ரோட்டரி கழக தலைநகர் கிளையின் திரு ஜாலிய போதினகொட மற்றும் அவரது தோழர்களின் நன்கொடையின் ஊடாக 14 (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையினர் வெள்ளிக்கிழமை (19) தலுகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை பரிசளித்தனர்.

23 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்நிகழ்வை வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாராவின் வழிகாட்டுதலின் 62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்செல்ல மேற்பார்வை செய்தார்.

வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார பிரதம அதிதியாக கலந்துக் கொண்ட இந்நிகழ்வில் நன்கொடையாளர்களான சட்டத்தரணி திரு ஜலிய போதினகொடவுடன் அவரது ரோட்டரி கழக தோழர்கள், 623 வது பிரிகேட் தளபதி, 62 வது படைப்பிரிவு கேணல் பொது பணி, வன்னி சிவில் விவகார அதிகாரிகள், 14 (தொ) இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி, 62 வது படைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் தலுகல மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேபோல், அதே நன்கொடையாளர்கள் வியாழக்கிழமை (18) அனு / கோனுஹந்தேனவ மகா வித்தியாலயம் மற்றும் அனு / ஹேமமாலி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பில் நன்கொடையாளர்களான சட்டத்தரணி திரு ஜலிய போதினகொட தனது தோழர்களுடன் இணைந்துக்கொண்டார்.

623 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரபாத் கொடித்துவக்கு, 62வது படைப்பரிவு சிவில் விவகார அதிகாரி, 14 (தொ) இலேசாயுத படை , 5 (தொ) கஜபா படைகளின் கட்டளை அதிகாரிகள், 62வது படைப்பிரிவு, 14 (தொ) இலேசாயுத படை , 5 (தொ) கஜபா படைகளின் சிப்பாய்கள் பிரதம அதிதியுடன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அனு / கோனுஹந்தேனவ மகா வித்தியாலயம் மற்றும் அனு / ஹேமமாலி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்த திட்டங்களுடன் தொடர்புபட்டனர். Asics footwear | Men’s shoes