Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd March 2021 12:46:58 Hours

விஜயபாகு காலாட் படையின் 31 வது ஆண்டுவிழா போயகனையில்

மதிப்புமிக்க மற்றும் போர்க்குணமிக்க சண்டைப் பிரிவுகளில் ஒன்றான இலங்கை இராணுவத்தின் விஜயபாகு காலாட் படையின் நேசத்துக்குரிய மரபுகள் மற்றும் இராணுவ முறைகள் வழியே பின்பற்றி அதன் 31 வது ஆண்டு நிறைவு விழா குருநாகல் போயகனை படைத் தலைமையகத்தில் அதன் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி தலைமையில் திங்கட்கிழமை (22), நடைப்பெற்றது.

அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி இராணுவ முறைமைகள் மற்றும் பெருமைகளுக்கு முன்னுரிமையளித்து நடைப்பெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக வருகை தந்த விஜயபாகு காலாட் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிரா பிலபிட்டி அவர்களை படையணியின் நிலையத் தளபதி நுழைவாயிலில் வரவேற்றார்.

இராணுவ மரபுகளுக்கு அமைவாக நுழைவாயிலில் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து தாய் நாட்டிற்காய் உயிர் நீத்த விஜயபாகு காலாட் படையின் போர் வீரர்கள் நினைவுத் தூபி மற்றும் பரம விபுஷண தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தனது வண்ணமயமான சீருடையில் இராணுவ மரபுகளுக்கு ஏற்ப ணைங்களுடன் அணிவகுப்பு மரியாதை படைத் தளபதிக்கு வழங்கப்பட்டது. இது பார்வையாளர்கள் அனைவரனதும் கவனத்தை ஈர்த்த சிறப்பம்சமாக இருந்தது.

நிகழ்வின் நினைவாக படையணி தலைமையகத்தின் வளாகத்தில் படைத் தளபதியினால் மரக்கன்று நாட்டிவைக்கப்பட்டது. பின்னர் தலைமையகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுடன் குழு படம் ஒன்றினையும் எபடைத் தளபதி எடுத்துக் கொண்டார்.

தலைமையக விளையாட்டு மைதானத்தில் காத்திருந்த படையினருக்கு உரையாற்றிய படைத் தளபதி விஜயபாகு காலாட் படையினை இலங்கை இராணுவத்தில் மிக நேர்த்தியான படைப்பிரிவுகளில் ஒன்றாக உருவெடுக்க அர்ப்பணிப்பு சேவையாற்றிய முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் படையினரை நன்றியுடன் நினைவுக்கூர்ந்தார்.

ஆண்டு நிறைவு விழாவின் இறுதி அம்சமா திங்கட்கிழமை பல்நோக்கு மண்டபத்தில் அனைத்து நிலைகளுக்குமான மதிய விருந்துபசாரம் இடம்பெற்றது. இதன் போது படையின் சிரேஸ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படை அலகுகளின் பிரதிநிதிகள், பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் படைத் தளபதியுடன் மதிய உணவு விருந்தை பகிர்ந்து கொண்டனர். சிரேஸ்ட அதிகாரிகள், படையணி பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்வுகளில் பங்குபற்றினர். Sports Shoes | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth