21st March 2021 12:40:55 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க பரந்தன் 662 வது பிரிகேட்க்கு உத்தியோகபூர்வ முதல் விஜயத்தை 2021 மார்ச் மாதம் 16 ம் திகதி மேற்கொண்டார்.
இராணுவ மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப 662 வது பிரிகேட் தளபதி கர்ணல் சாமிந்த லியனகே அன்புடன் வரவேற்றார். இதன் பிரிகேட் தளபதி மற்றும் அதன் கட்டளையின் கீழுள்ள அலகுகளின் கட்டளை அதிகாரிகள் தங்கள் படையினரின் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து சுருக்கமாக விபரித்தனர். அதைத் தொடர்ந்து 20 வது இலங்கை இலேசாயுத கலாட் படை மற்றும் 20 வது (தொ) விஜபாகு கலாட் படை ஆகிவற்றிக்கு விஜயம் செய்தார்.
குறித்த விஜயத்தின் போது தளபதியிடம் அவர்களின் துறை பொறுப்புகள் மற்றும் உளவுத்துறை திறன்கள் மற்றும் திறன்களை ஆழமாக அந்தந்த அலகுகளின் கட்டளை அதிகாரிகள் விளக்கினர். அத்தோடு தளபதி தற்போதைய கடமைகள் தொடர்பாக அலகுகளின் சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக விஜயத்தின் அடையாளமாக மரக்கன்றுகளை நாட்டிவைத்தார் அத்தோடு அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். கட்டளை அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவுகளின் பணி நிலை அதிகாரிகள் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டனர். Nike shoes | Nike Shoes, Sneakers & Accessories