Header

Sri Lanka Army

Defender of the Nation

20th March 2021 23:09:27 Hours

இராணுவத்தினரால் மேலும் ஒரு வீடு நிர்மாணிப்பு

'சிரச நிவச” திட்டத்திற்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய 61 ஆவது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் இயங்கும் 1ஆவது பொறியியலாளர் சேவை படையணி மற்றும் 8 ஆவது கெமுனு ஹேவா படையணியினரால் எம்டிவி / எம்பிசி, 'சிரச' ஊடக வலையமைப்பினரின் உதவியுடன் இரத்னபுரி மாவட்ட கீனகஹவில, கலதுவ பிரதேசத்தில் வாழும் பின் தங்கிய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ, அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தொழில்நுட்ப ரீதியாக திறமையான பொறியியல் மற்றும் பிற திறமையான படையினர்களின் பங்களிப்புடன் சிரச நிவாச திட்டத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது. பயனாளிக்கு வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் வியாழக்கிழமை (18) 61 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஹேவகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுப வேளையில் இப் புதிய வீட்டை திறந்துவைத்தார். எம்டிவி மற்றும் எம்பிசி வலையமைப்பின் பிரதானி திருமதி நீத்ரா வீரசிங்க, 'சிரச நிவாசா' திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.

வறுமையில் கோட்டின் கீழ் வாழும் திருமதி நிசன்சலா குணரத்ன அவர்களின் வாழ்க்கை நிலைமை கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் செலவினங்களைக் குறைப்பதற்காக நிதியுதவியாளர்கள் இராணுவத் தளபதியிடம் இராணுவ மனிதவளத்தையும் அவர்களின் கட்டுமானத் திறன்களையும் கோரியிறுந்தனர்.

இராணுவ சம்பிரதாய முறைபாடுகளுக்கு ஏற்ப பிரதம அதிதி மற்றும் நிதியுதவியாளர்களும் நினைவு பலகை திறந்துவைத்ததுடன் மங்கள விளக்கு ஏற்றல் மற்றும் பால்பொங்குதலுடன் ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீட்டை வழங்கினர்.

நிகழ்வில் 611 ஆவது பிரிகேட் தளபதி மேற்கு பாதுகாப்பு தலைமையகத்தின் திட்ட அதிகாரி, 8 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி , 'சிரச' அதிகாரிகள், பயனாளி குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கலந்துகொண்டனர். best shoes | Autres