20th March 2021 22:00:27 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான கல்வி விரிவுரைகளின் ஒரு பிரிவாக 'எந்த இராணுவமும் அதன் படையினரை விட சிறந்தது அல்ல' என்ற தொனிப்பொருளின் கீழ் கல்வி பட்டறை கடந்த வெள்ளிக்கிழமை (19) நடைபெறுகிறது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியும் இலங்கை பீரங்கியின் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்கள் மேற்கண்ட தொனிப்பொருளில் விரிவான சொற்பொழிவை நிகழ்த்தினார். இது ஒரு முழுமையான அதிகாரியாகவும், சிறந்த மற்றும் தனித்துவமான அடையாளம் காண தகுதியுடைய ஒரு படையினராகவும் இருக்க வேண்டும் என்று மேலும் வலியுறுத்தினார்.
பங்கேற்பாளர்களிடையே ஊக்கமளிக்கும் எண்ணங்களை உருவாக்கி, பணிச்சுமையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளையும், நிதானமான மனநிலையுடன் நிர்வாக நடைமுறைகளை பின்பற்றுவதையும் தொடர்பாகவும் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி, தொடர்பு அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.
இந்த பட்டறையில் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவே கொட தலைமையில் வெள்ளிக்கிழமை முதல் சில கட்டங்களில் தொடரும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். Nike Sneakers | Buy online Sneaker for Men