20th March 2021 20:00:27 Hours
மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பு மக்கள் வங்கி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்வில் 1 ஆவது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டி.சி.என் பொம்புவல அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மக்கள் வங்கியின் தலைவர் பிபி சுஜீவ ராஜபக்ஷ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு ரஞ்சித் கொடித்துவக்கு மற்றும் பொது முகாமையாளருடன் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக அவர் கலந்து கொண்டார்.
அத்துடன் சிறப்பு உரையாற்றும் போது தனது பரஸ்பர அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் திரு பி.எம்.ஜே.ஒய்.ஜி. பெர்னாண்டோ இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் குமுதுனி ஹெரத், இறைசரித் திணைக்கள பொது முகாமையாளர் சம்பா வீரசிங்க, முதுநிலை கலைஞர் திருமதி ரேணுகா பாலசூரிய மற்றும் சில பெண் தொழில் வல்லுநர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். affiliate link trace | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify