21st March 2021 13:30:55 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 ஆவது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு 7 ஆவது இலங்கை சிங்க படையினரால், ரோட்டரி கழக தலை நகர கிளையின் திரு ஜாலிய போதினாகொட, மற்றும் அவரது தோழர்களும் இணைந்து பாடசாலை புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை போகாஸ்வெவ வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (19) மாணவர்களிடையே பகிர்ந்தளித்தனர்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவின் வழிகாட்டுதலின் பேரில் 56 காலாட் படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில மற்றும் 563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பாண்டுக பெரேரா ஆகியோர் இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டனர்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். 56 வது படைப்பிரிவு தளபதி , 563 வது பிரிகேட் தளபதி, வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி -வன்னி ஆகியோரும் கலந்து கொண்டனர். 56 படைப்பிரிவின் 563 வது பிரிகேட்டின் 7 வது மற்றும் 21 வது சிங்கப்படையின் கட்டளை அதிகாரிகள் மாமடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , சட்டத்தரணி திரு ஜாலிய போதிநாகொட மற்றும் அவரது ரோட்டரி கழக தலைநகர கிளை தோழர்கள், போகஸ்வெவ வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி மற்றும் போகஸ்வெவ வித்தியாலய அதிபர் திரு ஆர் ஜெய கொடி ஆகியோரும் கலந்து கொண்டனர். latest Nike release | Sneaker & Lifestyle News