20th March 2021 22:15:27 Hours
குட்டிகலை 1 ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படையினர் சனிக்கிழமை (13) மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் பாரம்பரியங்களுக்கமைவாக நெல் அறுவடையினை ஆரம்பித்தனர்.
இந்த திட்டமானது இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு நவ ரட்டக் எனும் திட்டத்திற்கு ,அமைய 1 ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படையினரால் நான்கு மாதங்களுக்கு மேலாக முறையாக பராமரிக்கப்பட்ட வயல்களின் விளைசல் இவ்வாறு அறுவடை செய்யப்பட்டது.
குட்டிகலை 1 ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் தொழித்துறை பாடசாலையின் தளபதி கேணல் சரத் சில்வா மற்றும் 1 ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சி.எஸ்.தெமுனி, பிரதம விருந்தினர்களாக அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டதுடன் மத அனுஸ்டானங்களுக்கு பின்னர் அதிகாரிகள் மற்றும் படையினரால் நெல் அறுவடை செய்யப்பட்டது. Sport media | Autres