Header

Sri Lanka Army

Defender of the Nation

20th March 2021 22:30:27 Hours

31 வது ஆண்டு விழாவில் இராணுவ பொலிஸ் படை உயிர் நீத்த படையினருக்கு அஞ்சலி

இலங்கை இராணுவ பொலிஸ் படையின் 31 வது நிறைவாண்டு தினத்திற்கு இணையாக உயிர் நீத்த போர் வீரர்களின் நினைவு அஞ்சலி வெள்ளிக்கிழமை (19) கிரிதலை 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையில் நடைபெற்றது.

இராணுவ வழங்கல் கட்டளையின் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அவர்களின் தலைமையில் 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையினரால் ஏற்பாடு வெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், உயிர் நீத்த போர் வீரர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழா 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படை வளாக போர் வீரர்களின் நினைவு தூபியில் அனைத்து மத ஆசீர்வாதங்களுடன் இடம்பெற்றது.

உயிர் நீத்த போர்வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சூரிய அஸ்தமனத்தின் போது மின்விளக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் படைத் தளபதியுடன் ஒழுக்க பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அணில் இலங்கோன் நிலையத் தளபதி கேணல் லக்க்ஷ்மன் பமுனுசிங்க, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர்கள், சிரேஸ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற சிப்பாய்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். Sports brands | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE